15-வது திமுக பொதுக்குழு கூட்டத்தில் பதவியேற்று பின் பொதுச்செயலாளர், துணை செயலாளர் பேட்டி..

சென்னை: 15-வது திமுக  பொதுக்குழு கூட்டத்தில் பதவியேற்று பின் பொதுச்செயலாளர், துணை செயலாளர் பேட்டியளித்து வருகின்றனர்.

கனிமொழி உரை

15-வது திமுக பொதுக்குழு கூட்டம் இன்று அமைந்தகரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். கருணாநிதி மறைவுக்கு பிறகு வெற்றிடம் உருவாகிவிட்டதாக கூறினார்கள். திராவிட கொள்கைக்கு எதிரான சாம்ராஜ்யத்தை கட்ட நினைத்தனர். சனாதன சக்திகளுக்கு ஆழிப்பேரலையாக முதலவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். எதிரிகள் கனவை முறியடித்து இயக்கத்தை வெற்றிப்பாதையில் கொண்டு சொல்கிறார். இயக்கத்தை கட்டி எழுப்பிய அண்ணா, கலைஞர் ஏற்றிருந்த பொறுப்பை 2-வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுள்ளார் என்று கனிமொழி கூறியுள்ளார். பதவியே போனாலும் தன கொள்கையை விட்டு கொடுக்காமல், பெரியார், அண்ணா கனவுகளை நிறைவேற்றியவர் கலைஞர் ஆவார் என்று கனிமொழி கூறியுள்ளார்.

ஆ. ராசா உரை

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தபோதும் அதன் கைகளை கட்டிப்போட்டு வைத்திருந்தவர் கலைஞர் என ஆ. ராசா தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா உரையில் தெரிவித்தார்.

ஐ.பெரியசாமி உரை

அடுத்த 20 ஆண்டுகளுக்கு மு.க ஸ்டாலின் தான் முதலமைச்சர் என்று ஐ .பெரியசாமி கூறியுள்ளார். ஒவ்வொருவருக்கும் அரசின் திட்டத்தை கொண்டு செல்வதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார் என்று ஐ .பெரியசாமி கூறியுள்ளார்.

கே.என்.நேரு உரை

அனைவரையும் அரவணைக்கும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். வாழ்நாள் முழுவதும் மு.க.ஸ்டாலின் தலைவராகவும் முதலமைச்சராகவும் இருக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் கே.என்.நேரு உரையாற்றியுள்ளார்.

டி.ஆர்.பாலு  உரை

21 நாடுகளை ஒருங்கிணைத்தவர்  ரஷ்யத்தலைவர் ஜோசப் ஸ்டாலின் அவர் பெயரை தான் திமுக தலைவருக்கு சூட்டப்பட்டுள்ளது. இலக்குகளை வைத்து திமுக அணிகள் செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் டி.ஆர். பாலு கூறியுள்ளார்.  

துரைமுருகன் உரை

2-வது முறையாக திமுக பொதுச்செயலராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து என்னை தத்தெடுப்பது போல் எடுத்து வளர்த்தவர் கலைஞர் ஆவர். வரலாற்று சிறப்புமிக்க 4-வது  முறையாக பதவிக்கு நன்றி என்று  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Related Stories: