மகளிருக்கான ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி

சில்ஹெட்: மகளிருக்கான ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.   

மகளிர் ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட்டின் 8-வது சீசன் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக நிடா தார் 56 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

Related Stories: