திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் 3 குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை குழு அமைப்பு: தமிழக அரசு

திருப்பூர்: திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள நேற்று உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசகம் தலைமையில் கமிட்டி நியமனம் செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு நியமித்துள்ள கமிட்டி இன்று விசாரணையை தொடங்கவுள்ளது என்று தகவல் அளித்துள்ளனர்.  

Related Stories: