மெட்ரோ ரயில் பணி காரணமாக லஸ் சர்ச் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: மெட்ரோ ரயில் பணி காரணமாக லஸ் சர்ச் சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக லஸ் சர்ச் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றங்கள்  செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

லஸ் சந்திப்பிலிருந்து லஸ் சர்ச் சாலை வழியாக டி.டி.கே சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகர பேருந்துகள் அமிர்தாஞ்சன் சந்திப்பிலிருந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, மியூசிக் அகாடமி மேம்பால சர்வீஸ் சாலை, டி.டி.கே.மேம்பால சர்வீஸ் சாலை வழியாகவும், இலகு ரக வாகனங்கள் டி.சில்வா சாலை மற்றும் தேசிகா சாலை வழியாகவும் செல்லலாம். முசிறி சுப்பிரமணியம் சாலையில் போக்குவரத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: