தொழிலதிபரை கடத்தியவர் துப்பாக்கி முனையில் கைது

திருவொற்றியூர்: மாதவரத்தில் தொழிலதிபரை கடத்திய வழக்கில் 7  வருடமாக தலைமறைவான குற்றவாளியை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். மாதவரம் தணிகாசலம் நகர் நடேசன் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (25), தொழிலதிபர். இவர் கடந்த 2015ம் ஆண்டு தொழில் போட்டியின் காரணமாக கடத்தப்பட்டார். இது சம்பந்தமாக மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது  கடத்தியவர்களிடமிருந்து தப்பி வந்த கார்த்திக், காஞ்சிபுரம் மாவட்டம், வெள்ளவேடு பகுதியை சேர்ந்த மகேஷ் (41). என்பவர் தான் தன்னை கடத்தினார், என்று போலீசாரிடம் தெரிவித்தார்.  

இதையடுத்து, போலீசார் மகேசை தேடி காஞ்சிபுரம் சென்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தலைமறைவாக இருந்தார். அதனைதொடர்ந்து பல இடங்களில் தேடியும் அவர் பிடிபடவில்லை. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மகேஷ் பேசின் பிரிட்ஜ் பகுதியில் மறைந்திருப்பதாக மாதவரம் உதவி ஆணையர் ஆதிமூலத்திற்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து, மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் தலைமையில், சென்ற போலீசார் அங்கு உள்ள உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த மகேஷை  துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை புழல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: