பிரேசிலில் 5 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு!: தொற்றை தடுக்க தவறிய அதிபர் போல்சனாரோ பதவி விலக கோரி மக்கள் தொடர் போராட்டம்..!!

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் அதிபர் போல்சனாரோவை பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். பிரேசில் நாட்டில் கொரோனா தொற்றுகளும் உயிரிழப்புகளும் அதிகரித்திருக்கின்றன. சமீபத்தில் பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துவிட்டது. 
இதனால் கோவமடைந்திருக்கும் அந்நாட்டு மக்கள் தொற்றினை தடுக்க தவறிவிட்ட அந்நாட்டு அதிபர் போல்சனாரோவை பதவி விலக வலியுறுத்தி கடந்த 18ம் தேதி முதல் பிரேசில் முழுவதுமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 
இதனிடையே பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோருக்காக ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோபா கேபனா கடற்கரையில் மக்கள் அஞ்சலி செலுத்தினர். கடற்கரை மணலில் ரோஜா மலர்களை நட்டு உயிரிழந்த 5 லட்சம் பேருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர். பிரேசிலில் தற்போது நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்படுகின்றன. 
இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்தை கடந்திருக்கிறது. தொற்று அதிகம் உள்ள நாடுகளின் அட்டவணையில் அமெரிக்கா, இந்தியாவிற்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் பிரேசில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

The post பிரேசிலில் 5 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு!: தொற்றை தடுக்க தவறிய அதிபர் போல்சனாரோ பதவி விலக கோரி மக்கள் தொடர் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: