நடைபயணமாக செல்லும் கேரள இளைஞர் மெக்காவை அடைய ஒன்றிய அரசு உதவ வேண்டும்: முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை:  தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஷிஹாப் சித்தூர் என்ற 29 வயது இஸ்லாமிய இளைஞர் சவுதியில் உள்ள மக்காவிற்கு புனித நடைபயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இந்த இளைஞர் நடைபயணமாகவே ஹஜ் செல்ல ஜூன் 2ம் தேதி கேரளாவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கினார். வங்கதேசம் வழியாக பாகிஸ்தானை நெருங்கியிருக்கும் ஷிஹாப் சித்தூர் ஹஜ் நடைபயணத்திற்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. பாகிஸ்தான் அரசின் செயல் வெட்கி தலைகுனிய கூடிய வகையில் உள்ளது. ஹஜ் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ஷிஹாப் சித்தூர் குறிப்பிட்ட நாட்களுக்குள் மெக்காவை அடைய ஒன்றிய பாஜக அரசு உதவிட வேண்டும். 

Related Stories: