பாம்பன் பாலத்தை கடந்த 2 படகுகள் பாறைகளில் சிக்கியதால் பரபரப்பு

ராமேஸ்வரம்:  நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாக் ஜலசந்தி கடல் வழியாக ராமேஸ்வரம் அருகே பாம்பன் வந்து சேர்ந்தது. இதுபோல் 2 இழுவை படகுகளும் பாம்பன் கடல் பகுதிக்கு வந்தது. படகுகள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா பகுதிக்கு செல்வதற்காக பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்பட்டது. தொடர்ந்து இழுவை கப்பல்களும், மீன்பிடி படகுகளும் தூக்குப்பாலத்தை கடந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றன. அப்போது 2 மீன்பிடி படகுகள் பாலத்தை கடக்க முயன்றபோது, பாறையில் சிக்கி நின்று விட்டது.மீனவர்கள் பல மணி நேரம் போராடியும் படகுகளை மீட்க முடியவில்லை. தொடர்ந்து மீட்பு பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: