பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து விரிவுரையாளர்களை நீக்கக்கூடாது: ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் 1,311 பேர் பணியில் இருந்து ஒட்டுமொத்தமாக அண்மையில் நீக்கப்பட்டுள்ளனர். இந்த பணி நீக்கத்தை எதிர்த்து நாளை (இன்று) முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.  பணிபுரிந்து கொண்டிருக்கின்றவர்களை திடீரென்று வேலையை விட்டு நீக்குவது என்பது இயற்கை நியதிக்கு முரணானது. முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்டவர்களையும், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் அதிகாரிகளையும் அழைத்து பேசி, அவர்களுக்கு எங்கு பணி கொடுக்க முடியும் என்பதை ஆராய்ந்து, அனைவரையும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: