மசூதியில் வெடிகுண்டு போன் செய்தவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் இரவு 8.45மணியளவில், போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், தான் பர்கூர் மல்லப்பாடி மசூதி தெருவில் இருந்து பேசுவதாகவும், அப்பகுதியில் உள்ள மசூதியில், முகமது அலி என்பவர் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக பர்கூர் காவல்நிலையத்திற்கு தகவல்  தெரிவித்தனர். போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போது, அங்கு ஒருவர் போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும் அவரது செல்போனை வாங்கி பார்த்தபோது, அவர் தான் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தது தெரிந்தது. விசாரணையில் அவர், திருப்பத்தூர் அடுத்த கந்திலியை சேர்ந்த மாலிக் பாஷா (44) என்பதும், குடிபோதையில் 100க்கு போன் செய்து வெடிகுண்டு வைத்திருப்பதாக புகார் கூறியதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories: