கோவை அருகே வீடியோ எடுத்த வாலிபரை ஓட ஓட விரட்டிய யானை

கோவை: கோவை தடாகம், சின்னதடாகம், ஆனைகட்டி ரோடு, மருதமலை உள்ளிட்ட பகுதியில் யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சின்னதடாகம் சாலையோரம் நின்றிருந்த ஒற்றை யானையை வாலிபர் ஒருவர் பார்த்துள்ளார். அவர் யானையின் மிக அருகில் சென்று வீடியோ எடுத்தார். அப்போது, யானை அவரை துரத்த துவங்கியது. இதையடுத்து, அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். யானையை பின் தொடர்ந்து மற்றொரு நபர் வீடியோ எடுத்துக்கொண்டே ஓடினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. யானையை தொந்தரவு செய்த வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: