வானொலிகள் மூலம் இந்தி திணிப்பு கைவிடாவிட்டால் கண்டித்து போராட்டம்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: வானொலிகள் மூலம் இந்தி மொழியை திணிப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசை ராமதாஸ் எச்சரித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியை திணித்து வரும் ஒன்றிய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது. காரைக்கால் வானொலியில் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை நிறுத்தி விட்டு, வழக்கம் போல தமிழ் நிகழ்ச்சிகளையே ஒலிபரப்ப வேண்டும்.தருமபுரி, நாகர்கோவில் போன்ற மற்ற நிலையங்களுக்கு இந்தி நிகழ்ச்சிகளை நீட்டிப்பதையும் பிரசார் பாரதி கைவிட வேண்டும். இல்லாவிட்டால் காரைக்கால் வானொலி நிலையம் முன், அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை பாமக நடத்தும்.

Related Stories: