ராஜஸ்தானில் வீடியோ எடுத்து மிரட்டி 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: 10 மாதத்திற்குப் பின் ஒருவன் கைது

ஜெய்ப்பூர்:  ராஜஸ்தானில் அல்வார் மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி கோதாரா பகுதியை சேர்ந்த சாகில் 17 வயது சிறுமியை தொலைபேசி அழைத்து அவரது ஆபாச படங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி வரவழைத்தான். அங்கு அச்சிறுமியின் கிராமத்தை சேர்ந்த அர்பாஸ், ஜாவித், முஸ்தாகீம், தலீம், சல்மான், அக்ரம், சாகில் உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதனை வீடியோவாக படம் பிடித்ததனர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டி, அவரது ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.50,000 பணம் பறித்தனர்.

இதையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அவர்கள் 8 பேர் மீதும் கடந்த 29ம் தேதி வழக்குப் பதியப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அக்ரம் நேற்று கைது செய்யப்பட்டதாக கிஷன்கர் காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர். அவனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒரு கட்டத்தில் சிறுமி தங்களுக்குக் கேட்ட தொகையை வழங்க மறுத்ததால், அவரது வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்ததாகவும், கடந்த ஜனவரி 3, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் சிறுமி 2 முறை மீண்டும் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

Related Stories: