தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம்; சுற்றுலா பயணிகள் காண அனுமதி

ஊட்டி: ஊட்டி  அரசு தாவரவியல் பூங்காவில் தொட்டிகளை கொண்டு  மலர் அலங்காரம்  செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை சுற்றுலா பயணிகள் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு  தோறும் ஊட்டியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் கடை  பிடிக்கப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன்  கடை பிடிக்கப்படுகிறது. இரண்டாம் சீசன் இம்மாதம் முதல் வாரம் முதல்  துவங்கிய நிலையில், தற்போது தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்கள்  செய்யப்பட்டுள்ளன. 15 ஆயிரம் தொட்டிகளை கொண்டு மாடங்களில் அலங்கரித்து  வைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறிய புல் மைதானத்தில் தொட்டிகளை கொண்டு  பல்வேறு வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.  

2.5 லட்சம்  மலர் செடிகளில் பல்வேறு வகையான, வண்ணங்களில் பூங்கா முழுவதிலும் மலர்கள்  பூத்து குலுங்குகின்றன. தற்போது பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால் ஊட்டியை  சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

சுற்றுலா பயணிகள் வருகை  அதிகரித்துள்ளதால், நேற்று முதல் மலர் அலங்காரங்களை காண சுற்றுலா  பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பலரும் இந்த மலர்  அலங்காரங்களை கண்டு மகிழ்ந்தனர். அதன் அருகில் சென்று  புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories: