திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 6-வது நாள் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 6-வது நாள் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் இன்று அனுமந்த வாகனத்தில் திருக்கோலத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளினார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு நாளும் காலை, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

கோவிலின் நான்கு மாடவீதிகளில் வழியாக பெரும்பாலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் 6-வது நாளான இன்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை பல்லக்கு சேவை நடைபெற்றது.

இன்று பிரமோற்சவத்தின் 6ம் நாள் விழாவில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் இன்று அனுமந்த வாகனத்தில் திருக்கோலத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளினார்.

Related Stories: