சிட் பண்ட் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய நடவடிக்கை; அகில இந்திய சிட் பண்ட் சங்க புதிய தலைவர் வி.சி.பிரவீன் உறுதி

சென்னை: அகில இந்திய சிட் பண்ட் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவை ஏற்படுத்தும் வகையில், சென்னையில் சங்க தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.  அகில இந்திய சிட் பண்ட் சங்கத்தின் புதிய தலைவராக வி.சி.பிரவீன் தேர்வு செய்யபட்டுள்ளார். ஆலோசனை குழு சேர்மனாக சிவராமகிருஷ்ணன், பொதுச் செயலாளராக சிற்றரசு, அமைப்பு செயலாளராக கமல் பாம்பானி, பொருளாளராக அருணாச்சலம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.சி.பிரவீன் நிருபர்களிடம் கூறியதாவது:1982ல் இயற்றப்பட்ட ஒரு சிட் பண்ட் சட்டத்தில் தற்போதைய கால நடைமுறைகளுக்கு ஏற்றபடி சில திருத்தங்கள் அதில் கொண்டு வர வேண்டும்.

சிட் பண்ட் சேவைகளுக்காக விதிக்கப்படும் ஜிஎஸ்டியானது, தொழில்துறையின் வளர்ச்சியை கணிசமாக பாதிக்கும். வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனம் மற்றும் குறு நிதி நிறுவனங்கள் போன்ற நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் நிதி சேவைகள் ஜிஎஸ்டியின் வரிச்சேவைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் சிட் பண்ட்கள் வழங்கும் நிதி சேவைகள் 18 சதவீத வரிக்கு உட்பட்டது.இந்த ஒழுங்கின்மை நிச்சயம் சரி செய்யப்பட வேண்டும். சிட் பண்ட் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சங்கம் தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளும்.

Related Stories: