சீன செல்போன் கம்பெனி சொத்து முடக்கத்துக்கு ஓகே

புதுடெல்லி: செல்போன் நிறுவனமான ஷாவ்மியின் ரூ.5,551 கோடி சொத்து முடக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சீன செல்போன் நிறுவனமான ஷாவ்மி, கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள உற்பத்தியாளர்களிடம் இருந்து முழுமையாக தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்கி விற்பனை செய்கிறது. ஷாவ்மி நிறுவனம் வருடத்திற்கு ரூ.34,000 கோடி வருமானம் ஈட்டி வருகிறது. இதன் பெரும் பகுதியை சீனாவில் உள்ள தனது குழும நிறுவனங்களுக்கு போலி நிறுவனங்களும் மூலம் அனுப்பி வந்தது தெரிய வந்தது. ஷாவ்மியின் சீன தலைமை குழுமம் அறிவுறுத்தலின்படி இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளது.

ஒப்பந்த உற்பத்தியாளர்களுக்கு ஷாவ்மி இந்தியா நிறுவனம் தொழில்நுட்ப உள்ளீடு மற்றும் மென்பொருள் தொடர்பான எந்த உதவியையும் வழங்கவில்லை. ஆனால், எந்த வகையான சேவையையும் வழங்காத மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணத்தை கைமாற்றியுள்ளது. விசாரணைக்கு பிறகு கடந்த ஏப்ரல் 29ம் தேதி ஷாவ்மியின் ரூ.5,551 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதற்கு ஒப்புதல் கோரி அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட அமைப்புக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியது. அதன்படி, ஷாவ்மியின் சொத்து முடக்கத்துக்கு அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட அமைப்பு  ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: