அமைச்சர் முத்துசாமி அண்ணன் மறைவு முதல்வர் இரங்கல்

சென்னை: அமைச்சர் முத்துசாமியின் அண்ணன் இயற்கை எய்தியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, ‘வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமியின் அண்ணன் ராஜூ (எ) செங்கோட்டையன் நேற்று இரவு இயற்கை எய்தினார் என்று அறிந்து வருந்தினேன். உடன்பிறந்த அண்ணனை இழந்து தவிக்கும் அமைச்சர் முத்துசாமிக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: