கணக்கு அலுவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை: கணக்கு அலு வலர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர்(கிரேடு 3) பதவிக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழி தேர்வு வருகிற 8ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வு கூட அனுமதி சீட்டுகள்(ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றின் உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: