ஆந்திரா: திருப்பதி பிரமோற்சவ விழாவின் 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். பிரமோற்சவத்தின் 4ம் நாளான இன்று கலியுகத்தில் தம் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை அருளக்கூடிய வகையில் சொர்க்கத்தில் தேவர்கள் கேட்கும் வரங்களை தரும் கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் எழுந்தருளினார்.
