இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள்

சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகளையொட்டி தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை சென்னையில் இருந்து மாநிலம் முழுவதும் இயக்குகிறது. இதனால், பயணிகள் ஒரே இடத்தில் குவிவதை தடுக்க போக்குவரத்து நிர்வாகம் கோயம்பேடு, பூந்தமல்லி மற்றும் மாதவரம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்தை இயக்குகிறது. இந்த இடத்துக்கு செல்ல கோயம்பேட்டில் இருந்து இணைப்பு பேருந்தாக மாநகர பேருந்துகள் 24 மணிநேரமும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இதுவரை 47 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகள் வரும் 4, 5ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. நெரிசலின்றி பொதுமக்கள் பயணிக்கும் வகையில் இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதைப்போன்று பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: