பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அமெரிக்கா பயணம்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இன்று அமெரிக்கா செல்கிறார். தொடர்ந்து அவர் அங்கு 2 வாரம் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இன்று அமெரிக்கா செல்கிறார். அவர் அங்கு 2 வாரம் தங்க உள்ளார். அண்ணாமலையின் இந்த திடீர் பயணம் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை தனது உயர்கல்வி தொடர்பாக அமெரிக்காவுக்கு செல்கிறார்.

அவர் 2 வாரம் அங்கு தங்கியிருப்பார். அக்டோபர் 12ம் தேதி சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார். அமெரிக்க பயணத்தின் போது அங்குள்ள தமிழர்களை சந்தித்து பேச உள்ளார். அப்போது அவர்களது பிரச்னைகள் குறித்தும் கேட்டறிய உள்ளதாக பாஜ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ம் தேதி அண்ணாமலை இலங்கையில் பல பகுதிகளுக்குஅவர் சென்றார்.

Related Stories: