டி20 உலகக் கோப்பையில் இருந்து எலும்பு முறிவு காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலக உள்ளதாக தகவல்!!

மும்பை: டி20 உலகக் கோப்பையில் இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எலும்பு முறிவு  காரணமாக விலக உள்ளதாக பிசிசிஐ தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜஸ்பிரித் பும்ரா எலும்பு முறிவு காரணமாக விலக உள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்க அணியுடனான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக உள்ளதாக சமீப காலமாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 106 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி விமர்சனங்களுக்கான தகுந்த பதிலடி கொடுத்தது இந்திய அணி.

இந்நிலையில் அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து எலும்பு முறிவு காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலக உள்ளதாக தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: