கே.சி.பழனிசாமி நீக்கப்பட்ட பின்னரும் ஆன்லைனில் போலி உறுப்பினர் சேர்க்கை மூலம் பணம் பறிக்கிறார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஆன்லைனில் போலியாக உறுப்பினர் சேர்க்கை செய்து பண மோசடி செய்து வரும் முன்னாள் எம்.பி.கே., சி.பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுகவிற்கு சம்பந்தமில்லாமல் அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு,கட்சியில் இருந்து நிக்கப்பட்ட கே.சி.பழனிசாமி, அதிமுக பெயரை பயன்படுத்துவதும், அதன் வண்ணத்தை பயன்படுத்துவது, இணையதளத்தில் பொதுமக்கள், மற்றவர்களிடத்தில் உறுப்பினர் சேர்க்கை என்ற அடிப்படையில் போலியான அட்டைகள் வழங்குவது, பணத்தை வசூல் செய்வது போன்ற மோசடியான, ஏமாற்று வேலையை கே.சி.பழனிசாமி செய்து வருகிறார். இதுதொடர்பாக கே.சி.பழனிச்சாமி மீது கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதும், போலியாக அதிமுகவில் உறுப்பினரை சேர்த்து வசூல் செய்வது, அதிமுகவின் கொடியை வண்ணங்களை உபயோகித்ததும், இந்த செயலை முற்றிலுமாக கண்டிக்கத்தக்கது. எனவே கே.சி.பழனிசாமி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: