திருவள்ளூர் தெற்கு மாவட்டத்துக்கு புதிய செயலாளர்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக தலைமை கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அ.மனோகரன் (அமைப்பு செயலாளர்), எஸ்.ஆர்.அஞ்சுலட்சுமி ராஜேந்திரன் (அமைப்பு செயலாளர்), ஏ.சுப்புரத்தினம் (தேர்தல் பிரிவு செயலாளர்), ஆர்.ராஜலட்சுமி (மகளிர் அணி செயலாளர்), ஆதிரா நேவிஸ் பிரபாகர் (மருத்துவ அணி செயலாளர்), திருவாலாங்காடு ஜி.பிரவீன் (மாணவர் அணி செயலாளர்), இமாக்குலீன் ஷர்மிளி (மகளிர் அணி இணை செயலாளர்). எம்.ஆர்.ஆறுமுகம் என்கிற கேபிள் ஆறுமுகம் (திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் - அம்பத்தூர், ஆவடி சட்டமன்ற தொகுதிகள்)அதிமுகவினர் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: