ஆண், பெண் சமமே!: இந்திய விமானப்படை போர் விமானங்களை இயக்கம் பெண் விமானிகள்..சீனாவை ஒட்டிய பகுதியில் விண்ணை அளந்து சாதனை..!!

இட்டாநகர்: இந்திய விமானப்படையில் போர் விமானங்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண் விமானிகள் சீனாவை ஒட்டிய எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி அருகே விண்ணை அளந்து சாதனை படைத்து வருகின்றனர். விமானப்படையின் வான் மற்றும் தரை பிரிவு படைகளில் 1,300க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையை அக்னிபாத் திட்டத்தின் மூலம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெண் விமானிகளும் அதிகரித்து வரும் நிலையில், அருணாச்சலப்பிரதேசம், அசாம் அடங்கிய கிழக்கு பிராந்தியத்தில் போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் பெண்களே இயக்கி வருகின்றனர்.

உலகின் உயரமான போர்க்களமாக சியாச்சின் பனிமலை பகுதி, நாட்டின் கிழக்கு கோடி விமான தலமான அருணாச்சலப்பிரதேசத்தின் விஜயநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விமானங்களை செலுத்துவதிலும், கட்டுப்பாட்டு அறை பணிகளிலும் பெண்கள் திறம்பட ஈடுபட்டு படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் உதவி வருவதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். எஸ் ஏ 30, என்.கே.1 ரக போர் விமானப்படை பிரிவை சேர்ந்த தேஜஸ்வி, விமானப்படையில் பயிற்சி, பணி ஆகியவை ஆணுக்கு, பெண் சமமானதாகவே உள்ளது என்று கூறினார். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஏ.எல்.எச். துருக் மார்க் 3 ஹெலிகாப்டர்களையும் சீனாவை ஒட்டிய அருணாசலப்பிரதேசத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்ட பகுதியில் இந்திய விமானப்படையின் பெண் விமானிகள் இயக்கி வருகின்றனர். 

Related Stories: