விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைவு: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ கேரட் ரூ.100ஐ கடந்து தொடர்ந்து உச்சம்..!!

சென்னை: சென்னையில் ஒரு கிலோ கேரட் ரூ.100ஐ கடந்து தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ கேரட் ரூ.120க்கு விற்பனையாகிறது. விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைவு காரணமாக கேரட் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கேரட் விலை அடுத்த 2 வாரங்களுக்கு உச்சத்தில் இருக்கும் என்று கோயம்பேடு வியாபாரிகள் கூறுகின்றனர். கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 2,000 மூட்டைகள் வந்த நிலையில் தற்போது 500 மூட்டைகளே வருகின்றன.

பீட்ருட் விலை கிலோவுக்கு ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவைகளில் பெரியளவில் மாற்றம் இல்லை. பீன்ஸ் விலை ரூ.50 வரை விற்பனையாகிறது. கேரட் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைவாக உள்ளது. சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.25ல் இருந்து ரூ.30 வரை விற்கப்படுகிறது. மொத்த விலையை ஒப்பிடுகையில் சில்லறை விலையின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

Related Stories: