பாஸ்போர்ட்டுக்கு போலீஸ் சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி: பாஸ்போர்ட்டுக்கு போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழை ஆன்லைனில் பெறும் வசதி நாளை முதல் அறிமுகம் ஆகிறது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் பெறுவதில் பல நாட்கள் ஆகிறது. இதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க தபால் நிலைய சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து சான்றிதழ் பெறும் வசதியை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்துகிறது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளதையடுத்து தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் இந்த வசதி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் நாடுமுழுவதும் உள்ள தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் இந்த வசதி தொடங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: