சிதம்பரம் பகுதியில் பன்னீர் கரும்பு சாகுபடி தீவிரம்

சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் வண்டல் மண், மணல் சார்ந்த நிலங்கள் அதிக அளவில் இருப்பதால் பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது.மே, ஜூன், மாதம் பயிரிடப்படும் கரும்பு 10 மாதம் பயிராகும். இவை வரும் பொங்கல் பண்டிகைக்கு அறுவடை தயாராக இருக்கும். இப்பகுதியில் உள்ள கடவாச்சேரி, வேலக்குடி, வல்லம்படுகை, பழைய நல்லூர், அகரநல்லூர், வையூர், பெராம்பட்டு, வல்லத்துறை, கீழக்குண்டலப்பாடி, ஜெயங்கொண்டபட்டினம், மேலகுண்டலப்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் 100 ஏக்கருக்கு மேல் பன்னீர் கரும்பு பயிர் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பன்னீர் கரும்புகள் சென்னை, வேலூர், தூத்துக்குடி, செஞ்சி உள்ளிட்ட வெளியூர், வெளி மாநிலம் உள்பட பல ஊர்களில் இருந்து வந்து நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து செல்வார்கள். ஒரு ஏக்கருக்கு 40 டன் முதல் 45 டன் வரை மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: