5 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக இன்று சோனியாவை சந்திக்கும் லாலு, நிதிஷ்: மெகா கூட்டணி அமைக்க ஆலோசனை

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளுக்கு  பின் முதன் முறையாக சோனியா காந்தியை இன்று மாலை டெல்லியில் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோர் சந்தித்து, மெகா கூட்டணி குறித்து ஆலோசிக்க உள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய அளவில் மெகா கூட்டணியை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக பீகாரில் ஆளும் கூட்டணியின் இரண்டு முக்கிய தலைவர்களான ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் ஆகியோர் இன்று மாலை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச உள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், மேற்கண்ட மூன்று முக்கிய தலைவர்களும் மீண்டும் சந்திப்பது இதுவே முதல் முறை. இந்த சந்திப்பின் போது, தேசிய அளவில் மெகா கூட்டணி அமைப்பது உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நேற்று லாலு பிரசாத் யாதன் நிருபர்களிடம் கூறுகையில், ‘2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு பைத்தியக்காரர்; புத்தி இல்லாதவர்’ என் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: