மூலக்கொத்தளம் சுடுகாட்டில் ரூ.2.37 கோடியில் நவீன எரிவாயு தகன மேடைக்கான பூமிபூஜை: எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி துவக்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: மூலக்கொத்தளம்  சுடுகாட்டில் ரூ.2.37 கோடியில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்ப தற்கான பூமிபூஜையை எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி  துவக்கி வைத்தார். சென்னை மூலக்கொத்தளம் காட்பாடா பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் பழமையான சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் மொழிப்போர் தியாகிகள், அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் சமாதி உள்ளது. இந்நிலையில் சுடுகாட்டை நவீனப் படுத்தவும், விளையாட்டு மைதானம் அமைக்க கோரியும் அப்பகுதி மக்கள், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தியிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில்,  எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, மூலக்கொத்தளம் சுடுகாட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் நவீன விளையாட்டு மையம் அமைக்கப்படும் எனவும், எஞ்சிய பகுதியில் சுடுகாடு நவீனப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, சுடுகாட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க ரூ.2.37 கோடி நிதி ஒதுக்கினார். இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. எம்எல்ஏ  ஐட்ரீம் மூர்த்தி கலந்துகொண்டு  பூமிபூஜை  செய்து பணியை துவக்கி வைத்தார். இதில், மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, கவுன்சிலர் வேளாங்கண்ணி, பகுதி செயலாளர் சுரேஷ், வட்ட செயலாளர் கவுரீஸ்வரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: