கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்த ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

சென்னை: மாணவி மரணம் காரணமாக கலவரத்துக்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை  அரசு ஏற்று நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ‘‘தற்போது இப்பள்ளியில் படித்ததால் தங்கள் குழந்தைகளை  வேறு பள்ளிகளில் சேர்க்க மறுக்கிறார்கள் என்று பெற்றோர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே, இந்த பள்ளியை அரசு ஏற்று நடத்த கோரி செப்டம்பர் 14ம் தேதி மனு அளித்தும் அது பரிசீலிக்கப்படவில்லை.எனவே சிறப்பு அதிகாரியை நியமித்து பள்ளியை அரசு  தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்’’ என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

Related Stories: