பிழைப்பார் என ஒன்றரை ஆண்டாக கணவர் சடலத்தை பாதுகாத்த மனைவி

கான்பூர்:  உத்தரப் பிரதேசத்தில் இறந்த கணவரின் உடலை, ஒன்றரை ஆண்டுகளாக வீட்டில் மனைவி பாதுகாத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்தவர் விம்லேஷ் தீட்சத். வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்தாண்டு ஏப்ரலில், உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் இறந்தார். அவருடைய உடலை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர், அதை தகனம் செய்யவில்லை. விம்லேஷ் கோமாவில் இருப்பதாகவும், திரும்ப வருவார் என்றும் நம்பினர். அவருடைய மனைவி மனநிலை பாதிக்கப்பட்டவர்.

இறந்த கணவரின் சடலத்தின் மீது தினமும் கங்கை நீரை தெளித்து வந்துள்ளார். அவருடைய குடும்பத்தினரும் அவ்வப்போது ஆக்சிஜன் சிலிண்டரை வாங்கி வந்து பொருத்தி உள்ளனர். விம்லேஷ் கோமாவில் இருப்பதாக அண்டை வீட்டினரையும் நம்ப வைத்துள்ளனர். இந்நிலையில், விம்லேஷின் ஓய்வூதிய கோப்புக்கள் அப்படியே இருந்ததால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். மருத்துவ அதிகாரிகள், போலீசார் மற்றும் கலெக்டர் உள்ளிட்டோர் விம்லேஷ் வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்று ஆய்வு செய்தனர். அங்கு அழுகிய நிலையில் இருந்த விம்லேஷ் சடலத்தை கண்டு அதிர்ந்தனர். பின்னர், விம்லேஷ் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Related Stories: