கொரியா ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ரடுகானு

சியோல்: கொரியா ஓபன் டென்னிஸ்  போட்டியின் அரையிறுதியில் விளையாட இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில்  போலந்தின் மாக்தா லினெட்டுடன் (30 வயது, 51வது ரேங்க்) மோதிய ரடுகானு (19 வயது, 77வது ரேங்க்) 6-2, 6-2 என நேர் செட்களில் மிக எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 17 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

மற்றொரு காலிறுதியில் லாத்வியா வீராங்கனை ஜெலனா ஆஸ்டபென்கோ (25 வயது, 19வது ரேங்க்) 6-2, 6-1 என்ற நேர் செட்களில் விக்டோரியா கசின்ட்சேவாவை (அண்டோரா, 17 வயது, 186வது ரேங்க்) வீழ்த்தினார். டட்டியான மரியா (ஜெர்மனி), எகடரினா அலெக்சாண்ட்ரோவா (ரஷ்யா) ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர். அரையிறுதியில் ஆஸ்டபென்கோ - ரடுகானு, மரியா - அலெக்சாண்ட்ரோவா மோதுகின்றனர்.

Related Stories: