சரத் கமல் முன்னேற்றம்

சூரத்தில் நடக்கும் தேசிய விளையாட்டு போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட நட்சத்திர வீரர்கள் சரத் கமல், சத்தியன் தகுதி பெற்றனர். மேற்கு வங்கத்தின் ஜீத் சந்திராவுடன் மோதிய சரத் கமல் 7-11, 11-6, 8-11, 11-7, 11-6, 11-6 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். சத்தியன் 7-11, 11-8, 7-11, 11-6, 11-9, 11-6 என்ற செட் கணக்கில் மேற்கு வங்கத்தின் ரோனித் பஞ்ஜாவை வீழ்த்தினார். நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். கர்னாடகாவின் வி.குஷியுடன் மோதிய மனிகா 4-11, 11-8, 12-10, 4-11, 11-5, 8-11, 11-7 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.

Related Stories: