சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகி சிறை செல்லவில்லை என்று பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை மிசா சட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறை செல்லவில்லை என்று தெரிவித்தார். வேறு வழக்கில் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். அண்ணாமலையின் இந்த அறியாமை பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மிசா சட்டத்தில் ஸ்டாலின் சிறை சென்றதை அண்ணாமலை கொச்சைப்படுத்துகிறார் என்று கூறியுள்ள திருமாவளவன், கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள திராணி இல்லாதவர்கள் தான் அண்ணாமலை என்று குறிப்பிட்டார்.
