காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் ₹2.7 கோடி உண்டியல் காணிக்கை-அமெரிக்க டாலரும் கிடைத்தது

சித்தூர் :சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி  விநாயகர் கோயிலில் ₹2.7 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது. மேலும், அமெரிக்க டாலரும கிடைத்தது.சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலுக்கு மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து  நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலில் உள்ள உண்டியலில் தங்கம், பணம், வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் கோ பராமரிப்பு, அன்னதான திட்டம், தங்கத்தேர் கட்டுவதற்கு காணிக்கையாக நிதி செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகிறது. கடந்த மாதம் 31ம் தேதி முதல் தொடர்ந்து 21 நாட்கள் பிரமோற்சவம் நடைபெற்றதால் 23 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை கோயில் செயல் அலுவலர் சுரேஷ்பாபு மற்றும் கோயில் சேர்மன் மோகன் ஆகியோர் தலைமையில் ஆஸ்தான மண்டபத்தில் பலத்த பாதுகாப்புடன் நேற்று எண்ணப்பட்டது.

இதில், ₹2 கோடியே 7 லட்சத்து 13 ஆயிரத்து 581, 85 கிராம் தங்கம், ஒரு கிலோ 450 கிராம் வெள்ளி கிடைத்தது. மேலும், 336 அமெரிக்கா டாலர், 10 யூரோ, 20 கனடா டாலர், 20 மலேசியா, 57 ரிங்ஸ், 150 இங்கிலாந்து பவுன்ஸ் கிடைத்தது.

Related Stories: