கம்பம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்படும் காய்கறி கழிவுகளால் துர்நாற்றம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கூடலூர் : கம்பம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் காய்கறி கழிவுகள் கொட்டபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தேனியில் தொடங்கி கம்பம், கூடலூர், குமுளி தேசிய நெடுஞ்சாலை 220 தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ளது. இதில் கம்பம் குமுளி நெடுஞ்சாலையில், கம்பம், கூடலூர் பகுதியில் உள்ள காய்கறி மொத்தவியாபார கடைகளில் மீதமாகும் மற்றும் அழுகிய காய்கறிகளை, கடை உரிமையாளர்கள் வேலையாட்கள் மூலம் இரவுநேரங்களில் நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டி விடுகின்றனர்.

இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கம்பம் கூடலூர் ரோட்டில் அப்பாச்சி பண்ணை அருகே சிலர் அழுகிய பல்லாரி வெங்காயத்தை கொட்டிச் சென்றுள்ளனர். குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என தரம்பிரித்து வாங்கிச்செல்ல நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இருந்தும், இப்படி நெடுஞ்சாலை ஓரங்களில் கழிவு காய்கறிகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: