காங்கிரசுடன் கூட்டணி மம்தாவுடன் பேசி விட்டே பவார் சொல்லி இருப்பார்: திரிணாமுல் காங்கிரஸ் கருத்து

கொல்கத்தா: ‘மம்தா பானர்ஜியுடன் பேசிய பிறகே காங்கிரசுடன் கூட்டணி அமைக்க  திரிணாமுல் காங்கிரஸ் தயார் என்று சரத் பவார் அறிவிப்பு வெளியிட்டு இருக்கலாம்,’ என்று திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, கடந்த கால கசப்பான அனுபவங்களை கைவிட்டு, 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நலனுக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறார். அவர் தனது கடந்த கால அனுபவங்களை தேசிய நலன்களுக்காக கைவிட்டு, புதிய கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைய தயாராக உள்ளார்,’ என்று தெரிவித்தார். இது பற்றி கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர் சவுகதா ராய், ‘சரத் பவார் இந்த நாட்டின் மிக பெரிய தலைவர். மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்தாமல் அவர் இந்த கருத்தை கூறியிருக்க மாட்டார்,’ என்றார்.

Related Stories: