சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட சுவாதியின் பெற்றோர் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ரூ.3 கோடி இழப்பீடு கோரி சுவாதியின் பெற்றோர் தக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கி வருகிறது, ஸ்வாதி கொலை திட்டமிட்ட சம்பவம் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2016ம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம் பெண் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில்தான், ஜூலை 1ம் தேதி, அப்போதைய நெல்லை மாவட்டமான செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்தது. கைது செய்தபோதே அவர் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொள்ள முயற்சித்ததாக காவல்துறை தரப்பால் கூறப்பட்டது.

ராம்குமார் ஸ்வாதியை ஒரு தலையாக காதலித்ததாகவும், அவர் காதலை மறுத்ததால் கொலை செய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் செப்டம்பர் 18ம் தேதி மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் அறிவித்தனர்.

இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையின் மற்றும் ரயில்வே நிர்வாகத்தின் லட்சியமே காரணமாக தனது மகள் உயிரிழந்ததாக சுவாதியின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனால் தனது மகள் உயிரிழந்ததற்கு இழப்பீடாக ரூ. 3 கோடி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் பூ விசாரணைக்கு வந்தது.

அப்போது ரயில்வே துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது. சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம்

Related Stories: