பூந்தமல்லி எஸ்.ஏ.பொறியியல் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா: பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த மாணவர்களுக்கு ரொக்க பரிசு

திருவள்ளூர்: பூந்தமல்லி எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் டி.துரைசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் டி.பரந்தாமன், செயலாளர் டி.தசரதன் பொருளாளரும், தாளாளருமான எஸ்.அமர்நாத், இணை செயலாளர் எஸ்.கோபிநாத், இயக்குனர்கள் டி.சரஸ்வதி, டாக்டர் எஸ்.அரவிந், டி.சபரிநாத், எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எஸ்.ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை தலைவர் பேராசிரியர் பி.ஆர்.தபஸ் பாபு முதன்மை விருந்தினரை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார்.

இந்த விழாவில் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் மனிதவள மேம்பாட்டு துறை துணைத்தலைவர் தேன்மொழி  ராதாகிருஷ்ணன் 874 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், அண்ணா பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த 10 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கான ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கி வாழ்த்தி பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது, இன்று பட்டம் பெரும் பட்டதாரிகள் இனிமேல் உங்களது உறுதிப்பாட்டை நோக்கி செல்ல வேண்டும். ஒரே மாதிரியான கலாச்சாரத்தில் இருந்து பன்முக கலாச்சாரத்திற்கு மாறுவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்  தகவல் தொடர்பு விளக்கக் காட்சி மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன் போன்ற மென்மையான திறன்களை பணிச் சூழலுக்கு ஏற்றவாறு வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் வளர்ந்து வரும் உலக பொருளாதாரத்திற்கு இணையாக நீங்கள் திறமைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவர் அவர் பேசினார். முடிவில் மனித வளம் மற்றும் அறிவியல் துறை தலைவர் முனைவர் டி.செந்தில்குமார் நன்றி கூறினார்.

Related Stories: