பெண்ணை பலாத்காரம் செய்து செயின் பறித்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 3 சவரன் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த 25 வயது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கத்தியைக்காட்டி மிரட்டி 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றதாக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் மீது கிண்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்யது அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு அல்லுகுளம் வளாகத்தில் உள்ள சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக், இந்த வழக்கில் அனைத்து சாட்சியங்களும், ஆவணங்களும் அறிவழகன் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளன. எனவே, அறிவழகனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: