சென்னை: ஸ்கின் அலர்ஜி சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார், நடிகை சமந்தா. சமந்தாவுக்கு தோல் அலர்ஜி ஏற்பட்டுள்ளதன் காரணமாக, சூரிய ஒளியில் நின்றாலும், படப்பிடிப்பில் பயன்படுத்தும் மின்விளக்குகள் முன் நின்றாலும் தோலில் அலர்ஜி ஏற்படும். கடந்த சில வருடங்களுக்கு முன்பும் சமந்தாவுக்கு இதுபோல் பிரச்னை ஏற்பட்டது. அப்போது மணிரத்னத்தின் ‘கடல்’, விக்ரம் நடித்த ‘ஐ’ படங்களில் நடிக்க தேர்வாகி, பிறகு அப்படங்களில் இருந்து விலகினார். இதற்கு அப்போது ஏற்பட்ட ஸ்கின் அலர்ஜிதான் காரணம். அந்த நேரத்தில் தொடர்ந்து சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு தேறினார். பிறகு நிறைய படங்களில் நடித்தார்.