திருப்போரூர் அரசு பள்ளி அருகேயுள்ள விளையாட்டு திடலை திறக்க கோரி கலெக்டரிடம் இளைஞர்கள் மனு

திருப்போரூர்: திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளியை ஒட்டி பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. இந்நிலையில் தனிநபர்கள் சிலர் புகார் கூறியதன் அடிப்படையில் விளையாட்டு மைதானத்தின் கதவுகள் பூட்டப்பட்டு பொது மக்களும், உள்ளூர் இளைஞர்களும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 6 மாதமாக  விளையாட்டு மைதானத்தில் எந்த விளையாட்டு போட்டிகளும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று திருப்போரூர் சமத்துவ இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்குழு சார்பில் அனைத்து கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.  மனுவில், திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை அனைத்து தரப்பு இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திறந்து விடவேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

இதுபோல் தண்டலம் கிராம பெரிய ஏரியின் நீர்நிலையை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீட்கவேண்டும் எனவும் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர்,  இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: