சினிமாவில் பெண் சண்டைக் கலைஞர்களின் தேவை அதிகரித்துள்ளது: ஸ்டண்ட் சில்வா

சென்னை: ஸ்டண்ட் சில்வா சினிமா வுக்கு வந்து 20 வருடங்கள் நிறைவடைந்தது. இதையொட்டி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நான் சினிமாவுக்கு வந்து 20 வருடங்களாகிறது. ஸ்டண்ட் இயக்குனராகப் பணியாற்றத் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதுவரை 9 ெமாழிகளில், 250 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் இயக்குனராகப் பணியாற்றியுள்ளேன். சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு சமுத்திரக்கனி, சாய் பல்லவி தங்கை பூஜா கண்ணன் நடித்து ஓடிடியில் வெளியான ‘சித்திரைச் செவ்வானம்’ என்ற படத்தை இயக்கினேன். விரைவில் இன்னொரு படம் இயக்குவதற்கான கதை விவாதம் நடக்கிறது. சினிமாவின் எல்லா துறைகளிலும் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருப்பது போல் ஸ்டண்ட் துறையிலும் இருக்கிறது. இப்போது சண்டைக் காட்சிகள் படத்தின் கதையுடன் இணைந்து பயணிப்பதால், ஸ்டண்ட் இயக்குனரும் கதாசிரியரின் பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. நிறைய சண்டைக் கலைஞர்களுக்கு தீவிர பயிற்சி கொடுத்து உருவாக்கி வருகிறேன். நிறைய பெண் சண்டைக் கலைஞர்கள் என்னிடம் பயிற்சி பெற்றுள்ளனர்.

கடைசி நேரத்தில் தங்களுடைய பெற்றோர் அனுமதிக்கவில்லை என்றும், திருமணம் நிச்சயமாகி விட்டது என்றும் சொல்லி ஒதுங்கி விடுகின்றனர். பெண்கள் துணிச்சலுடன் இத்துறையில் பணியாற்ற முன்வர வேண்டும். இப்போது பல ஹீரோயின்கள் அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்து வருவதால், அவர்களுக்கு உதவி செய்வதற்கு பெண் சண்டைக் கலைஞர்களின் தேவை அதிகரித்துள்ளது.

Related Stories: