புதுடெல்லி: வக்பு வாரிய ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கானை லஞ்ச ஒழிப்புத்துறை (ஏசிபி) போலீசார் நேற்று கைது செய்தனர்.டெல்லி வக்பு வாரியத்தின் தலைவராக ஆம் ஆத்மி கட்சியின் ஓக்லா தொகுதி எம்எல்ஏ அமனதுல்லா கான் இருந்து வருகிறார். இவர், வக்பு வாரியத்திற்கு பணி நியமனம் செய்ததில் முறைகேடு செய்ததாக 2 ஆண்டுகளுக்கு முன்பாக பதிவு செய்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
