சென்னை- ரேணிகுண்டா இடையே அதிவேக சோதனை ஓட்டம் இன்ஜின் கோளாறால் தடங்கல்

அரக்கோணம்: சென்னை சென்ட்ரல்- ரேணிகுண்டா இடையே ரயில்களை பயணிகள் ரயில்களை அதிகபட்சமாக 130 முதல் 145 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்கும் வகையில் தண்டவாளங்கள் தகுதி பெற்று உள்ளதா? என்பதை அறிய, நேற்று சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று காலை 10.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, மதியம் 12.15 மணி அளவில் ரேணிகுண்டா சென்றடைந்தது. பின்னர் அந்த ரயில், ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1மணி அளவில் புறப்பட்டு சென்னை நோக்கி சென்றது. அரக்கோணம் ரயில் நிலையம் 2வது பிளாட்பாரத்தில் நுழையும்போது, சோதனை ரயில் இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டு அப்படியே நின்றுவிட்டது. ரயில்வே ஊழியர்கள் சோதனை ஓட்ட ரயில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறை சுமார் ஒருமணி நேரம் போராடி சரி செய்தனர்.

Related Stories: