மினி லாரி மீது பாய்ந்து நிர்வாண ஆசாமி சாவு

தண்டையார்பேட்டை: தங்க சாலை மேம்பாலத்தில் நிர்வாணமாக ஓடிவந்து மினி லாரியில் பாய்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் கீழே சர்வீஸ் சாலையில் நேற்று மாலை மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென நிர்வாணமாக ஓடிவந்து, அந்த மினி லாரி மீது பாய்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், லாரியை நிறுத்த முயன்றார். இருப்பினும் லாரியில் சிக்கிய அந்த நபர் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தார்.  அப்பகுதியினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க செல்ல ஏற்பாடு செய்வதற்குள் பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளர் காசியப்பன் சம்பவ இடத்துக்கு வந்து அந்த நபரின் சடலத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, மினி லாரி டிரைவர் தெலுங்கானா மாவட்டம் சுபியாபேட்டையை சேர்ந்த ஏகாஸ் சாமி (31) என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். தற்கொலை செய்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது தற்கொலை செய்ய வேண்டும் என மினி லாரியில் விழுந்தாரா, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: