ரூ.500 கோடி முறைகேடு மாஜி அமைச்சர் கைது

அகமதாபாத்: குஜராத்தில் 1996ம் ஆண்டு சங்கர்சிங் வகேலா முதல்வராக இருந்தபோது அவரை அமைச்சரவையில் விபுல் சவுத்ரி உள்துறை அமைச்சராக இருந்தார். பின்னர், குஜராத் மாநில கூட்டுறவு பால் விற்பனை சம்மேளனத்தின் தலைவராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் மேஹ்சானா மாவட்டத்தில் உள்ள துாத்சாகர் பால் பண்ணை தலைவராக இருந்தார். அப்போது, அந்த நிறுவனத்தில்ரூ.500 கோடி முறைகேடுகள் நடந்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விபுல் சவுத்ரிக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சவுத்ரியின் ஆடிட்டர் சைலேஷ் பாரீக் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் விபுல் சவுத்ரியை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று செய்தனர். ஏற்கனவே, துாத்சாகர் பால்பண்ணை ஊழியர்களுக்கான போனஸ் தொகைரூ.14.8 கோடியை கையாடல் செய்ததாக கடந்த 2020ம் ஆண்டு விபுல் சவுத்ரி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: