புடினை கொல்ல முயற்சி கார் மீது திடீர் தாக்குதல்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர்  புடினை கொல்ல நடந்த சதியில் இருந்து அவர் தப்பியுள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்ததால், உலகின் சர்ச்சைக்குரிய தலைவராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மாறி விட்டார். உக்ரைனில் கடந்த ஒரு வாரமாக ரஷ்ய படைகள் தோல்வி அடைந்து பின்வாங்கி வருகின்றன. இதன் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டு விட்டது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, பதவி விலகும்படி புடினை ரஷ்யாவை சேர்ந்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பொதுமக்களிடமும் இந்த கோரிக்கை தலை தூக்கியுள்ளது.

இந்நிலையில், புடினை கொல்ல சதி நடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. ‘யூரோ வீக்லி நியூஸ்’ செய்தி நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது. ‘புடின் சென்ற  சொகுசு காரின் மீது திடீரென மர்ம நபர்கள் நடத்திய  தாக்குதலில்,  காரில் இருந்து புகை கிளம்பியது. புடினின் பாதுகாவலர்கள் இதை கண்டதும்,  காரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று புடினை கீழே இறக்கினர். பு,’ என்று அது கூறியுள்ளது. இது தொடர்பாக, சந்தேகக்குரிய பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

*5 முறை முயற்சி

‘என்னை கொல்வதற்கு இதுவரையில் 5 முறை முயற்சி நடந்துள்ளது. அதில் இருந்து நான் உயிர் தப்பி இருக்கிறேன்,’ என்று புடினே, கடந்த 2017ம் ஆண்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: